உக்ரைன்-ரஷியா விவாதத்தின்போதும் தூங்கிய டிரம்ப்! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ...!
Trump fell asleep during Ukraine Russia debate Video goes viral internet
அமெரிக்கா ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக கடந்த ஜனவரியில் பதவியேற்ற ரிப்பப்ளிகன் கட்சியினர் டொனால்டு டிரம்ப், நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் கலந்துகொண்டார்.
உள்துறை மந்திரி மார்க் ரூபியோ, ராணுவ மந்திரி பீட்டர் ஹெக்சேத் உள்ளிட்ட அனைத்து முக்கிய மந்திரிகள் கூட்டத்தில் கலந்தனர்.மூன்று மணி நேரம் நீடித்த ஆலோசனையில், உக்ரைன்-ரஷியா போர் நிறுத்தம், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பிற உலக அரசியல் தீர்மானங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆலோசனையில் முழுமையாக கவனம் செலுத்தாமல், சில நேரங்களில் ஆழ்ந்த தூக்கத்தில் போய்விட்டார். சில சமயங்களில் 15-விநாடிகள் கூட கண்களை மூடி தலை தொங்கவிடும் விதமாக தூங்கிய அவர், இணையத்தில் வெளியான வீடியோவால் வைரலாகியுள்ளார்.
வீடியோவை விமர்சித்து சில வலைத்தளங்கள், 79 வயதான டிரம்புக்கு உடல் நலக்குறைபாடு காரணமாக இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று கருத்து தெரிவித்துள்ளன.
ஆனால் வெள்ளை மாளிகை இதை மறுத்து, ஜனாதிபதி நலமுடன் இருப்பதாகவும், 3 மணி நேர மாரத்தான் கூட்டத்தை வெற்றிகரமாக கையாளியதாகவும் விளக்கம் கொடுத்துள்ளது.
English Summary
Trump fell asleep during Ukraine Russia debate Video goes viral internet