2025 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள்!கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? - Seithipunal
Seithipunal


2025 தமிழ் சினிமாவிற்கு கலவையான ஆண்டாக அமைந்தது. அதிக படங்கள் ரிலீஸ் ஆனாலும், வெற்றிபெற்றவை குறைவாக இருந்தன. இருப்பினும், பாக்ஸ் ஆபிஸில் பத்து படங்கள் மட்டுமே தங்களது திறமையால் முன்னிலை பிடித்தன. இந்த ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் பின்வருமாறு:

2025 மே மாதத்தில் வெளியான சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு 10வது இடம் கிடைத்துள்ளது. 7 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் 88.1 கோடி ரூபாய் வசூல் செய்து வியப்பை ஏற்படுத்தியது.

9வது இடத்தை சூர்யா நடித்த ரெட்ரோ பிடித்துள்ளது. கங்குவா தோல்விக்குப் பிறகு சூர்யாவுக்கு ஆறுதல் வெற்றியைத் தந்த இந்த படம் 97.44 கோடி வசூலை பதிவு செய்தது.

8வது இடத்தில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் – சிம்பு இணைந்த தக் லைஃப் உள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 98.05 கோடி வசூலித்தது.

100 கோடி வசூல் பெற்று 7வது இடத்தை விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி பிடித்துள்ளது. ஃபேமிலி ஆடியன்சை கவர்ந்த இதுவொரு பாண்டிராஜ் படம்.

சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்த மதராஸி 100 கோடியை கடந்த வசூலுடன் 6வது இடத்தில் உள்ளது.

தீபாவளி ரிலீஸாக வந்த பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் 5வது இடத்தை பிடித்துள்ளது. இப்படத்தின் வசூல் 116 கோடி.

4வது இடத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி உள்ளது. இது 137.5 கோடி ரூபாய் வசூலித்து அஜித்தின் தொடர்ந்த பாக்ஸ் ஆபிஸ் பவரை நிரூபித்தது.

3வது இடத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் உள்ளது. 152 கோடி வசூலித்த இப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்தின் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது.

2வது இடத்தை 248 கோடி வசூலுடன் அஜித் நடித்த குட் பேட் அக்லி பெற்றுள்ளது. இது அஜித்தின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாகும்.

2025 ஆம் ஆண்டின் முதலிடத்தை 516.02 கோடி வசூலுடன் கூலி படம் கைப்பற்றியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த ரஜினிகாந்த் படம் உலகளவில் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை உயர்த்தியது.

இந்த வரிசையில் ரஜினிகாந்த், அஜித், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் 2025 ஆம் ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் முக்கிய முகங்களாக திகழ்ந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Top 10 highest grossing Tamil films of 2025 Who is the box office king of Kollywood


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->