என்னங்க சொல்லுறீங்க அது சிவன் பாடலா?சிவன் பாடலை காதல் பாடலாக மாற்றிய ஏ.ஆர்.ரகுமான்!அந்த மாஸ்டர் பீஸ் சாங் எது தெரியுமா?
What do you mean is that a Shiva song AR Rahman turned a Shiva song into a love song Do you know what that masterpiece song is
தமிழ் சினிமாவில் ஏ.ஆர். ரகுமான் – ஷங்கர் கூட்டணி என்றால் இசை ரசிகர்களுக்கு எப்போதும் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த கூட்டணியில் உருவான காதலன் படத்தில் வந்த “இந்திரையோ… இவள் சுந்தரியோ…” பாடலின் வரிகள் பிற்போக்கான காதல் பாடல் அல்ல, 18ஆம் நூற்றாண்டின் சிற்றிலக்கியத்திலிருந்து எடுத்தவை என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.
திருகூடராசப்ப கவிராயர் இயற்றிய திருக்குற்றாலக் குறவஞ்சி சிற்றிலக்கியத்தில், குற்றாலநாதரான சிவன் திருவீதி உலா வரும் தருணத்தை வர்ணிக்கும்போது, வசந்தவள்ளி என்ற பெண்ணின் அழகை புகழும் வகையில் எழுதப்பட்ட வரிகளே “இந்திரையோ… இவள் சுந்தரியோ” என்ற பகுதி.
சிவனைப் பார்க்க வரும் வசந்தவள்ளியின் அழகை,“இவள் தேவதையோ? ரம்பையோ? மோகிணியோ?”என்று கவிஞர் வர்ணித்த அந்தப் பழமையான வரிகள், ரகுமான் இசையில் மீண்டும் உயிர்பெற்று காதலன் படத்தில் ஹீரோயின் அறிமுகப் பாடலாக இடம்பெற்றது.
மூன்று தசாப்தங்கள் கடந்தும் அந்த பாடலின் இனிமையும், கவிதைச் செழுமையும் இன்றும் ரசிகர்களிடம் அதே ஈர்ப்புடன் உள்ளது.
English Summary
What do you mean is that a Shiva song AR Rahman turned a Shiva song into a love song Do you know what that masterpiece song is