அமித்ஷாவை சந்தித்த ஓ பன்னீர் செல்வம்!மீண்டும் என்டிஏவுக்கு வருகிறாரா ஓபிஎஸ்? தமிழக அரசியல் குறித்து பேசியது என்ன? - Seithipunal
Seithipunal


டெல்லி பயணத்தின் போது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவை இன்று சந்தித்து பேசியதாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழக அரசியல் சூழல் பற்றிய விவாதமே இந்த சந்திப்பின் மையமாக இருந்தது என கூறினார். இதன் பின்னணியில் அவர் மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் சேர உள்ளாரா என்ற யூகங்கள் எழுந்துள்ளன.

ஓ பன்னீர் செல்வம் டெல்லி தலைமை அழைப்பின் பேரிலேயே சென்றதாக தகவல் வெளியாகிய நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தியும் அதே நேரத்தில் டெல்லியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், பாஜக தலைவர்களுடன் அரசியல் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் இடம்பெற்றிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

முன்னதாக என்.டி.ஏ கூட்டணியில் இணைந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வி கண்ட நிலையில், பிரதமரை சந்திக்க அனுமதி வழங்காததை காரணம் காட்டி கடந்த ஜூலையில் கூட்டணியை விட்டு வெளியேறினார். பின்னர் தனிக்கட்சி தொடங்கும் எண்ணம், அல்லது விஜயின் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு என அவரது அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து பல பேச்சுகள் எழுந்தன.

சென்னை வேப்பேரியில் நடந்த அதிமுக உரிமை மீட்புக் குழு கூட்டத்தில், அதிமுக தொடர்ந்து சந்திக்கும் தோல்விகளை சுட்டிக்காட்டி, கட்சியில் மாற்றம் தேவைப்படுவதாக ஓபிஎஸ் பேசியிருந்தார். இதனால் தனிக்கட்சி தொடங்கும் வாய்ப்பு அதிகரித்ததாக கருதப்பட்ட நிலையில், அவரது திடீர் டெல்லி பயணம் புதிய அரசியல் ஊகங்களுக்கு இடம் கொடுத்து வருகிறது.

அமித்ஷாவை சந்தித்த விசயம் குறித்து ஓபிஎஸ், “தேவைப்படும்போது அமித்ஷாவிடம் அரசியல் பேசுவோம்” எனத் தெரிவித்தார். செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவர் எங்களை விட்டு சென்றுவிட்டார்; அவரைப் பற்றி பேச ஒன்றுமில்லை” எனக் கூறினார்.

ஓ பன்னீர் செல்வம் மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இணைவாரா, அல்லது தனி கட்சிக்கான முன்னேற்பாடுகளா என்கிற தெளிவு இன்னும் இல்லாத நிலையில், அவரது டெல்லி சந்திப்பு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

O Panneerselvam met Amit Shah Is OPS coming back to NDA What did he talk about Tamil Nadu politics


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->