நீட் விலக்கா டூ மது விலக்கா... ஒரே இரவில் மாறிய போஸ்டர்கள்! தஞ்சையில் பதற்றம்!
Thajavur Posters Changed Overnight
தஞ்சாவூரில் வீதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களின் இருந்த நீட் விலக்கா-மது விலக்கா என இரவோடு இரவாக மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இது போல் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சிகப்பு, கருப்பு வண்ணத்தில் நீட் தேர்வுக்கு எதிராக 'நீட் விலக்கு நமது இலக்கு' என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த போஸ்டரில் எந்த கட்சியினர் ஒட்டியது என இடம்பெறவில்லை. இந்நிலையில் நேற்று இரவு போஸ்டர்களின் நீட் என்ற வார்த்தைக்கு மேலே கருப்பு ஸ்டிக்கரில் மது என்ற வார்த்தை ஒட்டியுள்ளன.

இதனால் நீட் என்ற வார்த்தைக்கு பதிலாக மது என்ற வார்த்தை மாற்றி 'மது விலக்கு நமது இலக்கு' என போஸ்டர்களின் குறிப்பிடப்பட்டுள்ளது.
தஞ்சை மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் நீட் விலக்கா-மது விலக்கா என இரவோடு இரவாக மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Thajavur Posters Changed Overnight