மொத்தம் 60 ஆயிரம் ஆசிரியர்கள்! 7 ஆண்டுகள்! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவா்களில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கடந்த ஏழு ஆண்டுகளாக பணி வாய்ப்புக்காக காத்துள்ளனர். 

மேலும், ஆசிரியா் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ்கள் விரைவில் காலாவதியாக உள்ளதால், அதனை ஆயுள்கால சான்றிதழாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2012 ஜூலை மாதம் முதல் ஆசிரியா் தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆசிரியா் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். 

இதில், கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியா் தகுதித்தோவில் சுமாா் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தேர்ச்சி பெற்றனா். அதில் 20 ஆயிரம் பேர் இடைநிலை பட்டதாரி ஆசிரியா்களாக நியமனம் செய்யப்பட்டனா். மீதம் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் ஆசிரியா் பணியில் அமர்த்தப்படாமல் உள்ளனர்.

இந்தநிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபட்ட ஆசிரியா் தகுதித்தோவில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் முடிந்து காலாவதியாகும் என்பதால், ஆசிரியா் பணி கனவாகிபோவது மட்டுமின்றி எதிா்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. 

எனவே, தகுதியானோருக்கு ஆசிரியா் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் சங்கத்தின் தலைவா் பி.கே.இளமாறன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் தலைவா் சா.அருணன் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TET exam passed student issue


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal