பயங்கரவாதம் என்பது எந்த வடிவிலும் ஏற்க முடியாது.. அதிமுக உரிமை மீட்பு குழு அறிக்கை!
Terrorism in any form is unacceptable AIADMK Rights Restoration Committee Report
பயங்கரவாதம் என்பது எந்த வடிவிலும் ஏற்க முடியாத ஒன்றாகும். அதை எதிர்த்து நிற்பது ஒவ்வொரு இந்தியருக்கும் கடமையாகும் என்பதை இந்தியா மீண்டும் நிரூபித்துள்ளது என்று அதிமுக உரிமை மீட்பு குழு புதுவை மாநில கழக செயலாளர் திரு .ஓம்சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.
அதிமுக உரிமை மீட்பு குழு புதுவை மாநில கழக செயலாளர் திரு .ஓம்சக்தி சேகர் அவர்களின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஜம்மு காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மற்றும் நமது இந்திய அரசு எடுத்துள்ள வலுவான, தீர்மானமான பதிலடி நடவடிக்கையை மிகுந்த பாராட்டுடன் வரவேற்கின்றோம்.
இந்நேரத்தில், இந்தியாவின் பாதுகாப்பையும், மக்களின் நன்மையும் உறுதி செய்யும் வகையில் செயல்பட்ட இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடிஅவர்களுக்கு, மற்றும் நமது பாதுகாவலர்களான இந்திய ராணுவத்தினருக்கும் எங்கள் உளமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கிறோம்.
இந்தியாவின் அதிகாரம், பாதுகாப்பு, மற்றும் தேசிய அசைவுகளுக்கான மரியாதையை உலகிற்கு எடுத்துச்சொல்லும் இந்த நடவடிக்கைகள், பாதுகாப்பு கொள்கையில் ஒரு தைரியமான கட்டமாகும்.
பயங்கரவாதம் என்பது எந்த வடிவிலும் ஏற்க முடியாத ஒன்றாகும். அதை எதிர்த்து நிற்பது ஒவ்வொரு இந்தியருக்கும் கடமையாகும் என்பதை இந்தியா மீண்டும் நிரூபித்துள்ளது. நமது நாட்டின் ராணுவ வீரர்களுக்கு மீண்டும் ஒருமுறை தலைவணங்கி பாராட்டுகளை தெரிவிக்கிறேன் என அதிமுக உரிமை மீட்பு குழு புதுவை மாநில கழக செயலாளர் திரு .ஓம்சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.
English Summary
Terrorism in any form is unacceptable AIADMK Rights Restoration Committee Report