நெல்லையில் பயங்கரம்!...பட்டியலின சிறுவனுக்கு அரங்கேறிய கொடூர தாக்குதல்!...4 பேரிடம் விசாரணை! - Seithipunal
Seithipunal


நெல்லையில் பட்டியலின சிறுவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையில், தற்போது 4 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், மேலப்பட்டம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவன் அதே பகுதியில் கல்லூரி படித்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டிற்கு அருகே சென்ற கார் ஒன்று, மாணவன் மீது மோதுவது போல் வேகமாக வந்துள்ளது.

அப்போது காரை ஏன் இவ்வளவு வேகமாக ஒட்டி வந்தீர்கள் என்று தடுத்து நிறுத்தி கேட்ட போது, 17 வயது சிறுவனின் வீட்டிற்கே சென்று காரை ஒட்டி வந்தவர்கள் அறிவாள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்த நிலையில், தாக்குதல்  நடத்தப்பட்டது தொடர்பாக 4 பேரிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, பட்டியலின சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், சாதி ரீதியாக திட்டுதல், அவதூறு வார்த்தைகள் பேசுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ்,  வழக்குப்பதிவு செய்து 4 பேரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Terrible in nellai heinous attack on a listed boy enquiry of 4 people


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->