வடலூரில் ஓடும் பேருந்தில் பயங்கரம்...! டீசல் டேங்க் வெடித்து தீப்பிழம்பாக மாறிய பேருந்து...! - அலறியடித்து ஓடிய பயணிகள்...!
Terrible accident bus running Vadalur bus burst flames after diesel tank exploded Passengers ran away screaming
கடலூர் மாவட்டம் வடலூரில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய தீவிபத்தில், பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கணநேரத்தில் தீக்கிரையாகி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. டீசல் டேங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
‘சௌமியா’ என்ற பெயருடைய தனியார் பேருந்து, வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு விருத்தாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் டீசல் டேங்க் திடீரென வெடித்துச் சிதறியதாக தெரிவிக்கப்படுகிறது.வெடிப்பு ஏற்பட்ட சில நொடிகளிலேயே பேருந்து முழுவதும் தீ வேகமாக பரவியது.

கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அந்த பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்த ஓட்டுநர் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அனைவரையும் அவசரமாக கீழே இறக்கினர்.இந்த தீவிபத்தில் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாதது பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.ஆனால், நடுரோட்டில் பேருந்து கொழுந்துவிட்டு எரிந்ததால் அருகிலிருந்த 5 கடைகளும், 6 இருசக்கர வாகனங்களும் தீக்கிரையாகி சேதமடைந்தன.
இந்த தீவிபத்தால் அப்பகுதியில் சில நேரம் பரபரப்பான சூழல் நிலவியதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதேசமயம் காவலர்களும் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த திடீர் தீவிபத்தின் காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Terrible accident bus running Vadalur bus burst flames after diesel tank exploded Passengers ran away screaming