'என் குழந்தையை கொன்னுடுவேன்னு மிரட்டினான்'...! - தூத்துக்குடியில் பெற்ற மகனை தின்னர் ஊற்றி எரித்துக் கொன்ற தந்தை...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் குடும்பத்திற்குள் நீண்டநாளாக நீடித்து வந்த மோதல், இறுதியில் அதிர்ச்சிகரமான கொலையில் முடிந்துள்ளது. மதுபோதையில் தாய், தங்கை மற்றும் குடும்பத்தினரை மிரட்டிய மகனை, பெற்ற தந்தையே தின்னர் ஊற்றி தீவைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மடத்தூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (32). ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர், நீண்டகாலமாக கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு கயத்தாறில் உள்ள மறுவாழ்வு மையத்தில் 3 மாதங்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

சிகிச்சைக்குப் பிறகு சில காலம் சீராக இருந்த அவர், பின்னர் மீண்டும் மதுவுக்கு அடிமையானதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி மோதல் மற்றும் தகராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், நேற்று இரவு கடும் மதுபோதையில் வீட்டிற்கு வந்த அருள்ராஜ், தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் அவரது தாயின் தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி, சுரண்டையிலிருந்து தனது குழந்தையின் உடல்நலக்குறைவு காரணமாக தாய் வீட்டிற்கு வந்திருந்த தங்கையையும் மிரட்டியுள்ளார். மேலும், அவரது குழந்தையை கொன்று விடுவதாகவும் மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தை தட்டிக்கேட்ட தந்தை தளமுத்து (60) மீதும் அருள்ராஜ் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் தந்தை-மகன் இடையே கடுமையான கைகலப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தால் குடும்பத்தினர் அச்சத்தில் வீட்டை பூட்டிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், அருள்ராஜ் வீட்டின் வாசல் அருகே படுத்து தூங்கியுள்ளார்.இந்த சூழலில் ஆத்திரமடைந்த தந்தை தளமுத்து, வீட்டில் பெயிண்டிங் பணிக்காக வைத்திருந்த தின்னர் திரவத்தை மகன் மீது ஊற்றி தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.தீ வேகமாக பரவியதில் உடல் முழுவதும் கருகிய அருள்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மேலும், உயிரிழந்த அருள்ராஜின் உடலை மீட்ட காவலர்கள், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக தந்தை தளமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.குடும்பத் தகராறு கொடூரமான முடிவை எட்டிய இந்த சம்பவம் தூத்துக்குடி முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

He threatened kill my child Father who killed his son by pouring thinner him and burning him Thoothukudi


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->