இரவு, பகல் பாராமல் உழைக்கும் 'நிஜக் கடவுள்களுக்கு' நன்றி...! - மருத்துவர்கள் தினத்தில் முதல்வர் விஜய் வெளியிட்ட உருக்கமான வாழ்த்துச் செய்தி...! - Seithipunal
Seithipunal


தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, மனித உயிர்களை காக்க தன்னலமின்றி பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

உயிர்களை காப்பதையே உயரிய கடமையாகக் கொண்டு செயல்படும் மருத்துவர்களின் சேவை சமூகத்தின் நம்பிக்கைத்தூணாக விளங்குகிறது என அவர் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"மனித உயிர்களை பாதுகாக்கும் உயரிய பொறுப்பை ஏற்று, இரவும் பகலும் பாராது அயராது அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகளை மனமார தெரிவித்து கொள்கிறேன்.

மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, மனிதநேயம் மற்றும் கருணைமிக்க அணுகுமுறை எப்போதும் சமூகத்தால் போற்றப்பட வேண்டியவை.

நோயால் பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் மீண்டும் நம்பிக்கை மலரச் செய்வதும், அவர்களின் குடும்பங்களில் நிம்மதியையும் நம்பிக்கையையும் விதைப்பதும் மருத்துவர்களின் மகத்தான சேவையாகும்.

மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்து வரும் மருத்துவர்கள் அனைவரும் மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் சேவையில் சிறந்து விளங்க வேண்டும் என இந்த சிறப்புநாளில் மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.இவ்வாறு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thank you real gods who work day and night Chief Minister Vijay heartfelt message Doctors Day


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->