திருப்பத்தூரில் சோகம் || ஊதுபத்தி தொழிற்சாலையில் சிக்கி 10 -ம் வகுப்பு மாணவி பலி.!
tenth class student died in tirupathur
திருப்பத்தூரில் சோகம் || ஊதுபத்தி தொழிற்சாலையில் சிக்கி 10 -ம் வகுப்பு மாணவி பலி.!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் அதே பகுதியில் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று நடத்தி வருகிறார். இந்தத் தொழிற்சாலையில், ஆண்கள், பெண்கள் என்று சுமார் 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களில் காமாராஜ்புரம் பகுதியில் வசித்து வரும் கண்ணன் என்பவர் நீண்ட காலமாக இந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் மோகன், குடும்ப சூழல் காரணமாக கடந்த சில மாதங்களாக ஊதுபத்தி தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த மோகன் ஊதுவத்தி மாவு கலக்கும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரது கை இயந்திரத்தில் சிக்கியது. இதனால், வலித் தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த சக தொழிலாளிகள், ஓடிவந்து அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
tenth class student died in tirupathur