#விழுப்புரம் || ரயில் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சால் பதற்றம்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் அடுத்த கண்டம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பரணிதரன் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாகவே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் அருகே பரணிதரன் அவருடைய நண்பர்களுடன் அமர்ந்திருந்த போது அப்பகுதிக்கு வந்த நாராயணசாமி பரணிதரன் மற்றும் அவருடைய தரப்பினர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த பரணிதரனை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது பரணிதரன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தடயங்களை சேகரித்ததோடு அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பரணிதரன் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய நாராயணசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tension at Villupuram railway station caused threw country bomb


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->