தனக்குத்தானே சாவு ஸ்டேட்டஸ்.. சவுக்கிராக்கியால் பதறிப்போன உறவினர்கள்.! - Seithipunal
Seithipunal


தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் டிசைன் செய்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து, நண்பர்களை மாலையுடன் ஒரு ஆட்டோ ஓட்டுனர் வரவழைத்து சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தென்காசி மாவட்டத்திலுள்ள திருவேங்கடம் ஆவுடையாபுரம் பகுதியைச் சார்ந்தவர் மகாபிரபு. இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வரும் நிலையில், ஆட்டோவில் சவாரி கிடைக்காத நேரத்தில் வாட்ஸ் அப்பில் வீடியோக்களை பதிவு செய்வது, புகைப்படங்களை வைப்பது என்று இருந்துள்ளான். 

இந்நிலையில், தான் இறந்து போனால் எத்தனை பேர் நம் மீது அனுதாபப்படுவார்கள்? என்று அறிந்து கொள்வதற்கு, தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை தயார் செய்து அதனை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளான். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கையில் மாலையோடு வீட்டிற்க்கு வரவே, இவனது பிராங்க் என்ற பிராடுத்தனத்தை முன்னதாகவே தெரிந்துகொண்டு இருந்த நண்பர்கள் அலைபேசிக்கு தொடர்பு கொண்டு, ரோசாப்பூ மாலை வழங்கி வர வேண்டுமா? மல்லி பூ மாலை வாங்கி வர வேண்டுமா? என்று கலாய்த்துள்ளனர். 

மேலும், இது குறித்து அந்த மான**ட்ட மகாபிரபுவிடம் கேட்கையில், டைம் பாஸுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்ததாகவும், அதில் ஒரு இன்பம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளான். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tenkasi Thiruvengadam WhatsApp Status Like Death Fool 24 April 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->