பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாப பலி.. அரங்கேறிய சோகம்.! - Seithipunal
Seithipunal


பேருந்தில் பயணம் செய்த பெண்மணி, தவறி சாலையில் விழுந்து பலியான சோகம் நடந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், திருவேங்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கழுகுமலைக்கு செல்ல பெண்ணொருவர் தனியார் பேருந்தில் பயணம் செய்தார். தனியார் பேருந்து அதிவேகத்தில் சென்று கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. 

இந்நிலையில், பேருந்தில் இருந்து இறங்க, இருக்கையில் இருந்து எழுந்து வந்த பெண்மணி, பேருந்து வளைவு பகுதியில் திரும்புகையில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயமடைந்தார். பேருந்தை உடனடியாக நிறுத்திய ஓட்டுநர், அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த சி.சி.டி.வி காமிரா காட்சிகள் இணையங்களில் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi Sankarankoil Thiruvengadam Woman Slipped From Bus and Died


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal