ஆசிரியர்கள் கண்டித்ததால் மாணவர் விபரீத முடிவு: 3 ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை!
teacher reprimand student suicide
விழுப்புரம், அரக்கோணம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அதன்படி நகர் கிராமத்தைச் சேர்ந்த பவித்ரன் (வயது 13) பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இவரது பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியத்தில், தற்கொலை செய்து கொண்ட மாணவர் பள்ளியில் பயின்ற மாணவியை கேலி செய்ததால் ஆசிரியர்கள் கண்டித்து பவித்திரனை முட்டி போட வைத்துள்ளனர்.

இதனால் மனவேதனை அடைந்த மாணவர் வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
teacher reprimand student suicide