அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடல் - மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மே தினத்தினை முன்னிட்டு வரும் மே ஒன்றாம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் பார்கள் மூடபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

"வருகின்ற 01.05.2022  அன்று மே தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடுமதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25 II(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A),FL3(AA) மற்றும் FL11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அந்த அறிவிப்பில் ஆட்சியர் விஜயாராணி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tasmac shop leave in may one


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->