அமலாக்கத்துறைக்கு சம்மட்டி அடி! ஆர்ப்பரிக்கும் திமுக, காங்கிரஸ்!
TASMAC ED Raid DMK congress happy sc order
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை (ED) விசாரணையை உச்சநீதிமன்றம் தற்காலிகமாக தடை செய்தது குறித்து திமுகவும் காங்கிரஸும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கூறுகையில், "அரசியல் இலாபத்துக்காகத் திட்டமிட்டு தொடுக்கப்பட்ட வழக்காக இது இருக்கிறது. அதற்கு தடை விதித்து நியாயத்தை நிலைநிறுத்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பை முழுமையாக வரவேற்கிறோம். பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் அமலாக்கத்துறை அரசியல் அழுத்தத்திற்கான ஆயுதமாக செயல்படுகிறது. தற்போது அந்த அமைப்புக்கு சட்டப்பூர்வமான சம்மட்டியடி பட்டுள்ளது" என்றார்.
மேலும், காங்கிரஸ் தமிழ்நாடு கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், "டாஸ்மாக் வழக்கு என்பது பழிவாங்கும் நோக்கத்தில் தொடுக்கப்பட்டதாகும். அமலாக்கத்துறை தனது அதிகார வரம்புகளை மீறி செயல்பட்டதால்தான் உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டிய நிலை உருவாயிற்று. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நெடுநாளாக அமலாக்கத்துறை சோதனையோ, வழக்கோ இல்லாமல் செயலற்ற நிலையில் இருக்கிறது," என்றார்.
"பாட்டிலுக்கு ரூ.10 அதிகம் பெற்றிருக்கிறார்கள் எனில், அதை வாங்கியவர்களையும் விசாரிக்க வேண்டும். அதிகாரிகளை மட்டுமே குறிவைப்பது நியாயமல்ல" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
English Summary
TASMAC ED Raid DMK congress happy sc order