இந்தாண்டு டெங்குவால் 16,546 பேர் பாதிப்பு: ஒன்பது பேர் பலி; அமைச்சர் சுப்பிரமணியன் கூறுவது என்ன..?
Minister Subramanian says nine people have died from dengue fever
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலில் ஒன்பது பேர் உயிரிழந்த்துள்ளனர். இது குறித்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில், மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெறாததால் தான் இவர்கள் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், டெங்கு காய்ச்சலை பரப்பும் 'ஏடிஸ்' வகை கொசு நன்னீரில் வளரக்கூடியது.
தற்போது மழைக்காலம் என்பதால், கூடுதலாக உற்பத்தியாகும். எனவே, வீடு மற்றும் சுற்றுப்புறங்களை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், தமிழகத்தில் டெங்கு உயிரிழப்புகள், 2012-ஆம் ஆண்டில் 66 பேரும், 2017-இல் 65 பேர் என பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது, இந்த இரண்டு ஆண்டுகள் தான் உயிரிழப்புகள் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது, டெங்கு உயிரிழப்பு ஒற்றை இலக்கத்திலேயே உள்ளதாகவும், இந்தாண்டில் இதுவரை, 16,546 பேர் பாதிக்கப்பட்டு, ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாதத்தில் மட்டும், 1,500க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன், டெங்குவால் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் இதய நோயாளிகளாக உள்ளனர் என்றும், அவர்கள் காய்ச்சல் பாதித்த போது, மருத்துவமனைக்கு வராமல் வீட்டிலேயே இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுளளார்.
சிறிய அளவிலான காய்ச்சல் பாதிப்பு என்றாலும், உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்றும், டாக்டர் பரிந்துரையில் மட்டுமே மருந்து, மாத்திரை உட்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Minister Subramanian says nine people have died from dengue fever