கள்ள ஓட்டை தடுக்க சூப்பர் ஐடியா..! கைரேகை பதிவு அவசியம்; தலைமை தேர்தல் அதிகாரிக்கு பறந்த கடிதம்..!
Letter to the Chief Electoral Officer stating that fingerprint registration is necessary to prevent fraudulent voting
வரும் நவம்பர் மாதம் 06, 09 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்று 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகளும் வெளியிடப்படவுள்ளது. இதனால் பீஹார் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதனை அடுத்து அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அணைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
அதனை தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை மேற்கொள்வது குறித்து தேர்தல் ஆணையம் தீர்மானித்து இன்று முதல் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு ஜனநாய படுகொலை என்று கூறி கடுமையாக எதிர்த்துள்ளது.
இந்நிலையில், தேர்தல்களில் 'ஓட்டுப்பதிவின் போது, வாக்காளரின் கைரேகை பதிவை சரிபார்க்க வேண்டும்' என, சென்னையை அடுத்த திருவஞ்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துகுமார் என்பவர் இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

'தேர்தல் நேரத்தில், சிலர் கள்ள ஓட்டு போடும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க, வாக்காளர் தன் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே, ஓட்டுப்பதிவு இயந்திரம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
அந்த வசதியை, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்படுத்துவதுடன், கைரேகை பதிவை கட்டாயமாக்க வேண்டும். இதன் வாயிலாக, கள்ள ஓட்டு போடுவது தடுக்கப்படும். சில ஓட்டுச்சாவடிகளில் முகவர்கள் மிரட்டப்பட்டு, கள்ள ஓட்டு பதிவு செய்யப்படுகின்றன.
ஒருவரின் வாக்காளர் அடை யாள அட்டையை, ஓ.டி.பி., எனும் ஒருமுறை பயன்படும் குறியீடு இன்றி, ரத்து செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டால், ஒவ்வொருவரும் நேர்மையாக தங்களின் ஓட்டை பதிவு செய்ய வழி ஏற்படும்.' என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Letter to the Chief Electoral Officer stating that fingerprint registration is necessary to prevent fraudulent voting