பயனர்கள் நீண்டநாள் கேட்ட வசதி வந்துடுச்சு! -இன்ஸ்டாகிராம் புது அப்டேட் ப்ளாஸ்ட்! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தள உலகில் தனி அரசை நிறுவி வரும் இன்ஸ்டாகிராம், இன்று உலகம் முழுவதும் 2 பில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. அதில் மட்டும் இந்தியாவில் 40 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் தினமும் இன்ஸ்டாவில் ஸ்க்ரோல் செய்து வருகின்றனர். டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதற்கு பிறகு, ரீல்ஸ் வீடியோக்கள் இந்தியாவில் வெடித்தளவுக்கு பிரபலமடைந்தன.

ஆரம்பத்தில் புகைப்படங்களைப் பகிரும் ஒரு சாதாரண தளமாக இருந்த இன்ஸ்டாகிராம், இப்போது ரீல்ஸ், ஸ்டோரி, லைவ், ஷாப் என பல்வேறு புதிய வசதிகளால் பயனர்களை கவர்ந்திழுத்து வருகிறது.இந்நிலையில், இன்ஸ்டா ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த “Watch History” (வாட்ச் ஹிஸ்டரி) என்ற முக்கிய வசதி தற்போது அறிமுகமாகியுள்ளது.

இதன் மூலம், இனி நீங்கள் முன்பு பார்த்த ரீல்ஸ் வீடியோக்களை மீண்டும் தேடி பார்க்கலாம், இதற்கு முன்பு இன்ஸ்டாவில் இதற்கான வசதி இல்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ள அப்டேட்டில், இந்த ஆப்ஷனை Settings , Your Activity (உங்கள் செயல்பாடு) பகுதியில் காணலாம் என இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.பயனர்கள் இதை பற்றி சமூக வலைத்தளங்களில் பெரும் உற்சாகத்துடன் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

feature users have been asking for for a long time is here Instagrams new update blasts


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->