வங்கக்கடலில் கொந்தளிக்கும் மோன்தா...! - புயல் தாக்கம், விமான சேவைகள் ரத்து...!
Cyclone Montha rages Bay of Bengal Cyclone impact flight services cancelled
மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான ‘மோன்தா’ புயல், தற்போது தீவிர புயலாக (Severe Cyclonic Storm) வலுப்பெற்று, மணிக்கு 17 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. தமிழகத்தைத் தாண்டி வடகிழக்குத் திசையை நோக்கி நகரும் இந்த புயல், மாநிலத்திலிருந்து சற்றே விலகி சென்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது, புயலின் மையம் ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 230 கி.மீ மற்றும் காக்கிநாடாவிலிருந்து 310 கி.மீ தொலைவில் உள்ளது. புயலின் தாக்கத்தால் இன்று அதிகாலை 5.30 மணி வரை 8 இடங்களில் கனமழை மற்றும் ஒருசில இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது.
புயல் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கப் போகிறது. கரையை நோக்கி நகரும் போது மழையின் தீவிரம் மற்றும் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா மாநிலங்களில் அதி கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில் விடிய விடிய மழை
மோன்தா புயலின் வெளிப்புற வலயங்கள் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று முழுவதும் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.
புயல் தாக்கம் – விமான சேவைகள் பாதிப்பு
மோன்தா புயலின் தாக்கம் காரணமாக, சென்னை விமான நிலையத்திலிருந்து விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி உள்ளிட்ட 12 நகரங்களுக்கு செல்லவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் பயணிகள் சேவைகள் தற்காலிகமாக தாமதமடைந்துள்ளன.
வானிலை மையம் எச்சரிக்கை:
அடுத்த 24 மணி நேரம் கடற்கரை மாவட்டங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். மக்கள் அவசியமில்லாமல் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டாம்.
English Summary
Cyclone Montha rages Bay of Bengal Cyclone impact flight services cancelled