தென் சீன கடல் பகுதியில் பதற்றம்: அமெரிக்க விமானம் போர், கடற்படை ஹெலிகாப்டர் விபத்து..!
US aircraft fight and Navy helicopter crashes in South China Sea
தென் சீன கடல் பகுதியில் நடந்த இருவேறு நிகழ்வுகளில் அமெரிக்க போர் விமானம் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க கடற்படையின் 'நிமிட்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள விமானம் தாங்கி கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது. அப்போது இந்தக் கப்பலில் இருந்து வழக்கமான ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு கடற்படை ஹெலிகாப்டரும், ஒரு போர் விமானமும் 30 நிமிடங்கள் இடைவெளியில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியுள்ளன. இதில் பயணித்த விமான ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், இது ஒரு ராணுவ பயிற்சி விபத்து என்றும், தேவைப்பட்டால் அமெரிக்காவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க சீனா தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
US aircraft fight and Navy helicopter crashes in South China Sea