தமிழக வெற்றிக் கழகம் உறுப்பினர் சேர்க்கை: புதிய செயலி அறிமுகப்படுத்த முடிவு!
Tamilnadu Vetri Kalagam launch new application
நடிகர் விஜய் கடந்த 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி தொடர்ந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. மேலும் மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி மற்றும் உறுப்பினர் சேர்க்கை ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் தொடர்பான அறிவிப்பு 10 நாட்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

பொறுப்பாளர்கள் நியமனத்துக்கு பிறகு கட்சி உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிர படுத்த தமிழக வெற்றிக்கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்க விஜயின் தமிழக வெற்றிக்கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழக வெற்றிக்கழக உறுப்பினர் சேர்க்கைக்கு என சிறப்பு செயலியை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Tamilnadu Vetri Kalagam launch new application