டாஸ்மாக் பார்கள் நிபந்தனையுடன் நாளை முதல் திறக்க தமிழக அரசு அனுமதி.! - Seithipunal
Seithipunal


கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு இருந்த மதுபான கடைகள் பல்வேறு நிபந்தனையுடன் திறக்கப்பட்டு, தற்போது இயல்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில், மதுபான கடைகளின் பிரதான வருமானத்திற்கு வழிவகை செய்த பார்கள் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பார் உரிமையாளர்கள் வைத்து வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் நிபந்தனையுடன் பார்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மதுபான கடைகளில் உள்ள பார்களில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே இருக்க வேண்டும். பாரின் நுழைவு வாயிலில் சானிடைசர் வைக்க வேண்டும். 

பார்களுக்கு வருகை தரும் நபர்களுக்கு வெப்பபரிசோதனை நடைபெற்ற பின்னரே அவர்களை பார்களுக்குள் அனுமதி செய்ய வேண்டும். கொரோனா அறிகுறி இல்லாத நபர்களையே பார்களுக்குள் அனுமதி செய்ய வேண்டும். 

பார்களுக்கு வருகை தரும் நபர்களின் அலைபேசி எண், பெயர், முகவரி தொடர்பான விபரங்கள் சேகரித்து வைத்திருக்க வேண்டும் என்று தமிழக டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Tasmac Bar Open Tomorrow with Corona Safety Rules


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal