வரும் 8ம் தேதிவரை தமிழகத்தில்...! சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


 

கேரளாவில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு:

கேரளக் கடற்கரையிலிருந்து தெற்கு குஜராத் கடற்கரை வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும்  மேற்கு வங்க, ஜார்க்கண்ட் மாநிலங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதாலும் கேரளாவில் இன்றும், நாளையும் (ஆக.03) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Rain Alert weather update 02 Aug 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->