தமிழகம் முழுவதும் மேலும் தனியார் மினி பேருந்துகள்! எதிர்ப்பு, கருத்து கேட்புக்கூட்டம்!
Tamilnadu Private Mini Bus Service issue
தமிழகம் முழுவதும் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது குறித்து, புதிய வரவு திட்ட அறிக்கை மீது நாளை கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் 2950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்று, சட்டப்பேரவைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அறிவிப்பின் அடிப்படையில், புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரவு அறிக்கையை தமிழக அரசு கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் நான்கு கிலோமீட்டர் கூடுதலாக மினி பேருந்துகளை இயக்கவும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப திருவற்றியூர், மணலி, மாதாவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட மண்டலங்களில் மினி பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசீலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அனுமதிக்கு தமிழ்நாடு மினி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வந்தாலும், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட அமைப்புகள் கடுமையான கண்டனத்தையும், எதிர்ப்பையும் முன்வைத்து வருகின்றன.
இதன் காரணமாக இந்த விவகாரம் குறித்து உள்துறை செயலாளர் தலைமையில், சென்னை கலைவாணர் அரங்கில் நாளை காலை 10 மணி அளவில் கருத்து கேட்புக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களின் அடிப்படையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamilnadu Private Mini Bus Service issue