தீபாவளி கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் எத்தனை பேருக்கு தீக்காயம்? சென்னையில் சிகிச்சையில் எத்தனை பேர்? அமைச்சர் பேட்டி!
Tamilnadu Diwali Crackers Accident report
தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழக அரசு தரப்பில் இந்த தீபாவளியில் பொது மக்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் தீ விபத்துகளை தடுக்கும் விதமாக தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 21 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பினால் சென்னையில் 7 பேர், மதுரையில் 5 பேர், திருச்சியில் 3 பேர் தீக்காயம் அடைந்துள்ளனர். தஞ்சாவூரில் 6 பேர் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் சென்னையை பொறுத்தவரை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தீ விபத்துகள் இல்லாத தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் அதேபோல் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடப்படும் என நாம் நம்புகிறோம்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
"பாதுகாப்பாக பட்டாசுகளை வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்"
English Summary
Tamilnadu Diwali Crackers Accident report