முக்கிய இடத்தில் இருந்து திமுக தலைமைக்கு விரைந்த கடிதம்.. கொண்டாட்டத்தில் ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிபிஐ (எம்) கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தராம் யெச்சூரிக்கு ஓ.பி.சி இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆதரவு அளிக்க கூறி கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்திற்கு தற்போது பதில் வந்துள்ளதாக, தமிழக சி.பி.ஐ (எம்) பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக சி.பி.ஐ (எம்) பொதுச்செயலர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், சிபிஐ (எம்) அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் சீத்தராம் யெச்சூரிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அக்கடிதத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் சீத்தராம் யெச்சூரி அவர்கள் நன்றி தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் எழுதியுள்ளார் " என்று கூறப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CPIM support DMK About OBC Reservation


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal