ஊரடங்கில் வழங்கப்படவேண்டிய தளர்வுகள் குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஊரடங்கில் வழங்கப்படவேண்டிய தளர்வுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,170 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் மொத்த தமிழகத்தின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,90,633 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,418 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பினர். 

இதனையடுத்து, மொத்த பூரண நலன் பெற்று இல்லத்திற்கு திரும்பியோரின் எண்ணிக்கை 26,40,627 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 20 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 35,948 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கில் வழங்கப்படவேண்டிய தளர்வுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் மக்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் அல்லது தளர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM MK Stalin Discuss with Medical Expert Team about TN Lockdown Extension After Oct 31 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->