#Breaking: சசிகலா கட்சியிலேயே கிடையாது.. அவர்கள் வந்தாலும்.., தமிழக முதல்வர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " இந்த சந்திப்பில் அரசியல் ரீதியான பேச்சுக்கள் இடம்பெறவில்லை. 

நான் தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் வந்துள்ளேன். இப்போது அரசியல் பேசுவதற்கான நேரம் இல்லை. அதற்கான நேரம் இன்னும் இருக்கிறது. அம்மாவின் அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும். கருத்துக்கணிப்பு திமுகவினருக்கு வேண்டியவர்களிடம் எடுத்து, அவர்களே வெளியிட்டுக்கொள்வார்கள். 

சொந்த கட்சியை ஊக்கப்படுத்துவது அந்தந்த கட்சி நிறுவனர்களில் உரிமை. அந்தந்த கட்சிக்கென்று கொள்கை இருக்கிறது. ஆட்சிக்கு வரவே கட்சியை தொடங்கியுள்ளார்கள். கூட்டணி வேறு கொள்கை வேறு. அதிமுகவின் பொதுக்குழுவில் முடிவு எழுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக தலையில் தான் கூட்டணி இடம்பெற்றது. அதிமுகவில் சசிகலா இணைய வாய்ப்பில்லை. அவர் அதிமுக கட்சியில் இல்லை. 

தமிழகத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே பிரதமரை சந்தித்துள்ளேன். 100 விழுக்காடு இது தான் உண்மை. அதிமுக தெளிவாக முடிவு செய்தாகிவிட்டது. சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் திட்டம் இல்லை. டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஜெயலலிதா இருக்கையில் கட்சியிலேயே இல்லை. அம்மாவின் மறைவிக்கு பின்னர் தான அவர்கள் கட்சிகளு வந்தார்கள் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Pressmeet about Sasikala Join ADMK


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->