#சற்றுமுன்: ஒரேயொரு பழமொழி.. திமுக டோட்டல் வரலாறு குளோஸ்..! சூளுரைத்து மாஸ் காண்பித்த முதல்வர்.! - Seithipunal
Seithipunal


தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்., இறுதியில் தர்மமே வெல்லும் என்ற பழமொழிப்படி தர்மம் வென்று அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும் என தமிழக முதல்வர் சூளுரைத்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் மன்னார்குடி வேட்பாளர் ராஜமாணிக்கத்தை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது அவர் பேசுகையில், மு.க ஸ்டாலினை கடுமையாக சாடினார். 

இந்த பிரச்சாரத்தில் முதல்வர் பேசியதாவது, " மு.க. ஸ்டாலின் எங்கு சென்றாலும் எடப்பாடி பழனிச்சாமி என்று தான் பேசி வருகிறார். கடந்த 4 வருடத்திற்கு முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி என்றால் யாருக்கு தெரியும் என்று கூறினார். இன்று எங்கு சென்றாலும் எனது பெயரை தான் கூறி வருகிறார். 

எனது பெயரை மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை மு.க ஸ்டாலினுக்கு மட்டும் தான். நான் விவசாயி. சாதாரண விவசாயி முதல்வராவது மு.க ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. எத்தனை அரசியல் ரீதியான பிரச்சனைகளை திமுகவினர் கொடுத்திருப்பார்கள். அவை அனைத்தையும் தவிடுபிடியாக்கி இன்று உங்கள் முதல்வராக இருக்கிறேன். 

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்., இறுதியில் தர்மமே வெல்லும். இந்த தேர்தலிலும் தர்மம் வென்று அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும் " என்று தெரிவித்தார். இதனைக்கேட்ட அதிமுக தொண்டர்கள் கரகோஷமெழுப்பி உற்சாகத்தில் ஆட்பறித்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Election Campaign about DMK MK Stalin Marketing CM Name


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->