இரவு 10 மணி வரை 16 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்!
tamilnadu 16 districts rain
கடந்த 27ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகின்ற 3 ஆம் தேதி புயலாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த புயலுக்கு 'மிச்சாங் புயல்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் 4 ஆம் தேதி வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திரா இடையே வட தமிழகத்தை வந்தடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூரிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tamilnadu 16 districts rain