சீமானை கைது செய்யவேண்டும் - போராட்டத்தை அறிவித்த தமிழ் புலிகள் கட்சி! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி, தமிழ் புலிகள் கட்சி போராட்டத்தை அறிவித்துள்ளது. 

இந்த போராட்டத்திற்கு அனுமதி கோரி சென்னை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு, அக்கட்சியை சேர்ந்த பெ.சுப்பிரமணி எழுதியுள்ள கடிதத்தின் விவரம் பின்வருமாறு :

"கடந்த 13ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அருந்ததியர் சமூகம் குறித்து துப்புரவு பணிசெய்வதற்காக விஜயநகர பேரரசு காலத்தில் வந்தவர்கள் என்று மிக இழிவாக பேசியுள்ளார்,

இது சம்பந்தமாக ஈரோடு கருங்கல் பாளையம் காவல்துறை சீமான் மீது Sc/st பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளது,

எனவே சீமான் அவர்களை உடனே கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் 7-3-2023 செவ்வாய் காலை 11-30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் எங்கள் கட்சியின் சார்பில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதில் எங்கள் தலைவர் நாகை.திருவள்ளுவன் அவர்களும் மற்றும் தோழர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

எனவே மேற்கண்ட தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் ஒலிபெருக்கி வைப்பதற்கும் காவல்துறை அனுமதி வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்"

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Pulikal Katchi Say Seeman must arrest


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->