வரியைக் காட்டிபயமுறுத்தும் அமெரிக்கா: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சீனா எச்சரிக்கை..!
China warns US of increasing tariffs
அரியவகை தாதுக்கள் மற்றும் லிதியம் பேட்டரிகளை கொண்டு சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அந்த நாடு விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனா மீதான இறக்குமதி வரி கூடுதலாக 100 சதவீதம் விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரிவிதிப்பு வரும் நவம்பர் 01ந் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்நிலையில், இது குறித்து சீன வர்த்தக அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
'அமெரிக்காவின் நடவடிக்கை சீன நலன்களை பாதிக்கிறது. ஒவ்வொரு முறையும் வரியைக் காட்டி பயமுறுத்தி சீனாவை அணுகுவது சரியானது அல்ல. தங்களுக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒரு நியாயம் என்ற நிலையை அமெரிக்கா பின்பற்றுகிறது.
அதிக வரிகள் விதிக்கப்படும் என்று வேண்டுமென்றே அச்சுறுத்துவது சீனாவுடன் இணைந்து செயல்பட சரியான வழி அல்ல. தவறான பாதையில் செல்ல அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தினால், சீனா அதன் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.' என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
China warns US of increasing tariffs