ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்திய 204-வது ரேங்க் வீரர் வாலன்டின் சாம்பியன் வென்று சாதனை..! - Seithipunal
Seithipunal


சீனாவின் ஷாங்காய் நகரில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் நடந்த அரை இறுதிப் போட்டியில் செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவனான 04வது ரேங்கீழ் இருக்கும் நோவக் ஜோகோவிச்சை (38), மோனாகோவை சேர்ந்த, 204-வது ரேங்க் வீரர் வாலன்டின் வஷரோட் (26) வீழ்த்தி டென்னிஸ் உலகை அதிரச் செய்துள்ளார்.

அடுத்ததாக, மற்றொரு அரை இறுதியில் ரஷ்யாவின் டேனியில் மெத்வதேவை, பிரான்சின் ஆர்தர் ரின்டர்நெக் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், வாலன்டின் - ஆர்தர் இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடந்தது. முதல் செட்டை 06-04 என்ற புள்ளிக் கணக்கில் ஆர்தர் கைப்பற்றினார். சுதாரித்து கொண்டு ஆக்ரோஷமாக ஆடிய வாலன்டின் அடுத்த இரு செட்களையும், 06-03, 06-03 என்ற செட் புள்ளிக் கணக்கில் அபாரமாக வசப்படுத்தினார்.இதனால், 02-01 என்ற செட் கணக்கில் வாலன்டின் வஷரோட் வேண்டுள்ளதோடு, ஷாங்காய் மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். அவருக்கு, ரூ.10 கோடி பரிசும், 1000 புள்ளிகளும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த ஆர்தருக்கு ரூ. 5.3 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

204th ranked player Valentin Champion wins Shanghai Masters tennis tournament and sets a record


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->