14 வயது சிறுமியை கற்பழித்த தமிழக அரசு பேருந்து நடத்துனர்., உடந்தையாக இருந்த தாய்.! அடுத்து அரங்கேறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


கள்ளகாதலியின் 13 வயது மகளை 4வது திருமணம் செய்த பஸ் கண்டக்டரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், பெரிய கருக்கை பகுதியில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று திருமணமாகியும் அவருக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையில் அவருக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரி என்பவருக்கும் கள்ளதொடர்பு இருந்துள்ளது. பரமேஸ்வரிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம்  பரமேஸ்வரி தனது 13 வயது மகளை ராதாகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

மேலும், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், அந்த சிறுமி கர்பமடைந்தார். இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ராதாகிருஷ்ணன், அந்த சிறுமியின் தாய் பரமேஸ்வரி, ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், ராதாகிருஷ்ணனின் தாய் ருக்குமணி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu government bus driver rapes 14-year-old girl


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->