ஹாசினி கொலை வழக்கு; தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு..!
Tamil Nadu Government Appeals Against Acquittal of Dashvanth in Case of Sexual Assault on a Girl
சென்னை போரூர் அருகே கடந்த 2017-ஆம் ஆண்டு, ஹாஷினி என்ற 06 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதான தஷ்வந்த் என்ற இளைஞருக்கு மரண தண்டனை விதித்து செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அப்போது தீர்ப்பளித்தது.
ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை நாடி தஷ்வந்த் விடுதலையானார்.
இந்த தீர்ப்பை திருத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த எஸ்.வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், மேல்முறையீடு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக தஷ்வந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் உயர்நீதிமன்றம் அதுபோன்ற சான்றிதழ் எதுவும் வழங்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது நீதித்துறையை ஏமாற்றும் நடவடிக்கை மட்டுமல்லாமல், நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
குறித்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu Government Appeals Against Acquittal of Dashvanth in Case of Sexual Assault on a Girl