தாயின் பாசத்திற்கு ஈடேது; 6.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு காடாக்கிய வில்லன் நடிகர்..! - Seithipunal
Seithipunal


இந்திய திரையுலகில் பாலிவுட், கோலிவுட் மற்றும் டோலிவுட் எனப் பல்வேறு திரைத்துறைகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் புகழ்பெற்ற மூத்த நடிகர் சாயாஜி ஷிண்டே. இவர் தனது 92 வயது தாயின் மீதான பாசத்திற்காக மகாராஷ்டிரா முழுவதும் சுமார் 6.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, அதனை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி அமைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்தான் நடிகர் சாயாஜி ஷிண்டே. அவருடைய ஆரம்பக்கால வாழ்க்கை பெரும் போராட்டங்கள் நிறைந்தது. கடந்த 1978 ஆம் ஆண்டு இவர்களது குடும்ப நிலத்தை அணைத் திட்டத்திற்காக அரசு கையப்படுத்தியுள்ளது. அதற்குப் பதிலாக அவருக்கு நீர்ப்பாசனத் துறையில் Watchman வேலை வழங்கப்பட்டது.

35 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு, கடந்த 2022 இல் தான் இவர்களது குடும்பத்திற்கு மாற்று நிலத்தை அரசு வழங்கியுள்ளது. கடந்த நான்கு தசாப்தங்களாகத் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்ததாவர். ஆனாலும், வெறும் புகழும் பணமும் மட்டுமே தனக்கு மனநிறைவைத் தரவில்லை என்று பேட்டி ஒன்றில் அவர் முன்னதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கடுமையான வறட்சியின் போது, ஒரு கிராமத்து ஏரித் திடலில் நிழலுக்கு ஒரு மரம்கூட இல்லாமல் மக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் அவதிப்படுவதைக் கண்டு அவர் பெரிதும் கலங்கி போயுள்ளார்.

அதே காலகட்டத்தில், அவரது தாய்க்கு 92 வயதாகியிருந்த நிலையில், எந்த நேரத்திலும் தனது தாயை இழக்க நேரிடலாம் என்ற பயம் அவரை வாட்டியுள்ளது. அதாவது, மரணத்தை வெல்ல தன்னிடம் சக்தி இல்லை என்றாலும், தாயின் நினைவை இந்த உலகில் அழியாமல் வைக்க ஒரு வழியைக் அவர் கண்டறிந்தார்.

அப்போது தனது தாயிடம் சென்று, "உங்களை எப்போதும் உயிரோடு வைத்திருக்க என்னிடம் சக்தி இல்லை. ஆனால், உங்களது எடைக்கு நிகராக விதைகளை நிறுத்தி, அவற்றை மகாராஷ்டிரா முழுவதும் நடப்போகிறேன். அவை வளர்ந்து மரமாகி, நிழல் தந்து, பூத்துக் குலுங்கும்போது அதன் நறுமணத்தில் உங்களை நான் உணர்வேன்" என்று உருக்கமாகக் கூறிவிட்டு, இந்த மரங்களை நடும் முயற்சியைத் தொடங்கியுள்ளார்.

இதற்காக ஹைதராபாத்திலிருந்து இரண்டு லாரிகள் முழுவதற்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் மரக்கன்றுகளை வரவழைத்து, தனது கிராமத்தில் வெறும் 2,000 மரங்களுடன் 'சஹ்யாத்ரி தேவ்ராய்' (Sahyadri Devrai) என்ற பெயரில் காடுகளை உருவாக்கத் தொடங்கி உள்ளார்.

இன்று இந்த இயக்கம் 48 வெவ்வேறு இடங்களில் பரவி, லட்சக்கணக்கான மரங்களைக் கொண்ட அடர்ந்த காடுகளாக மாறியுள்ளது. குறிப்பாக, 60 ஆண்டுகளாக ஒரு மரம்கூட இல்லாமல் வறண்டு கிடந்த ஒரு கிராமத்தில், சாயாஜி ஷிண்டேவின் முயற்சியால் 17 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டு, இன்று 16,000 மரங்களுடன் அந்த பகுதியே பசுமையாகக் காட்சியளிப்பது நெகிழ்ச்சியை தருகிறது.

மரங்களை வெட்டுவதற்குப் பதிலாக, அவற்றை வேரோடு மாற்று இடத்தில் நடும் (Transplantation) தொழில்நுட்பம் மூலம் 200-க்கும் மேற்பட்ட பழமையான ஆலமரங்களை இவர் மறுவாழ்வு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ''இலவசமாக ஆக்சிஜனை சுவாசிக்கும் ஒவ்வொரு மனிதனும், தனது வயதிற்கு இணையான எண்ணிக்கையில் மரங்களை நட்டு இயற்கைக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும்" சாயாஜி ஷிண்டே குறிப்பிட்டுள்ளார்.

அரசு தனக்குத் தாமதமாக வழங்கிய நிலத்தை, தற்போது கிராமங்களுக்கு இலவசமாக மரங்களை வழங்கும் ஒரு மிகப்பெரிய நர்சரியாக (Nursery) மாற்றத் திட்டமிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Villain Actor Who Transformed a Land into a Forest by Planting 650000 Saplings


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->