கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கிய தவெக நிர்வாகியை மீண்டும் கட்சியில் இணைக்க போராட்டம்; விசாரணையில் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம், கணியம்பாடி பகுதியில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் தவெகவின் முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்த விஜயகுமார் என்பவர் தலா ஒரு லட்சம் மாதம் மாமூல் வழங்க வேண்டுமென மிரட்டியதால் செங்கல் சூளை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டார் என தமிழக வெற்றி கழக அடிப்படை உறுப்பினரிலிருந்து தவெக தலைமை அவரை நீக்கியது. 

இந்நிலையில் இன்று அந்த பகுதிகளுக்கே சம்பந்தமில்லாத இடையஞ்சாத்து கிராமத்திலிருந்து ஒரு 30 பேரை கணியம்பாடி கிராமத்திற்கு செல்ல வேண்டுமென அழைத்து அவர்களை நேராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அழைத்து வந்து திடீர் முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமாருக்கு மீண்டும் ஒன்றிய செயலாளர் பதவியை வழங்க வேண்டும் எனவும், செங்கல் சூளையினர் ஏரியில் மண் எடுத்து மண் திருட்டை செய்கிறார்கள் அதனை தடுக்க கோரி மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு,  காவல்துறையினரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

அதன்பின்னர், ஏடிஎஸ்பி பழனி தலைமையிலான காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியே அனுப்பி வைத்துள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் தங்களை எதற்கு அழைத்து வந்தனர் என தெரியவில்லை. கணியம்பாடி அழைத்து செல்வதாக கூறி வேலூருக்கு அழைத்து வந்ததாக கூறியுள்ளனர்.

தமிழக அரசு தான் கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியதாக தவெக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விஜயகுமாரை நீக்கிய நிலையில், அவருக்கு மீண்டும் கட்சியில் பதவியை மீண்டும் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளமை பேசும் பொருளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Protest Demands Reinstatement of TVK Functionary Expelled from Basic Membership


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->