'மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும்; அவர்களின் நலன்களுக்கே முன்னுரிமை'; தர்மேந்திர பிரதான் உறுதி..!
Dharmendra Pradhan assures that priority will be given to the welfare of students
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், சிபிஎஸ்இ-இன் 12-ஆம் வகுப்புத் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு மற்றும் தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய செயல்முறைகள் சார்ந்த விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக, உயர்நிலை ஆய்வுக் கூட்டம் இன்று டெல்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளர் சஞ்சய் குமார், சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங், ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் வி. காமகோடி, ஐஐடி கான்பூர் இயக்குனர் மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் கேந்திரிய வித்யாலயா சங்கதன்-ஐச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், மற்றும் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்த உயர்நிலை ஆய்வு கூட்டத்தில், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் உடனுக்குடன், வெளிப்படையான மற்றும் மாணவர்-நட்பு ரீதியிலான முறையில் தீர்வு காணப்படுவதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் மாணவர்-மைய அணுகுமுறையைக் கொண்ட தேர்வு முறையை உறுதி செய்வதில் மத்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அதேவேளையில், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ள நியாயமான அச்சங்கள் அனைத்தும் திறம்பட விரைவில் தீர்வு காணப்படும் என்று தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார்.
English Summary
Dharmendra Pradhan assures that priority will be given to the welfare of students