" திகட்டாத இன்பத்துடன், தேனிலவு பீடா "..! விற்பனை ஜோர்.. கண்ணீரில் 90 கிட்ஸ்.! - Seithipunal
Seithipunal


திருமணம் மற்றும் பிற விசேஷ நிகழ்வுகள் என்றாலே, நம்மவருக்கு வெற்றிலை போடும் பழக்கம் அதிகளவு உண்டு. திருமண நிகழ்ச்சிகளில் சாப்பாடு சாப்பிட்ட பின்னர், பாதாம் பால் அல்லது மிளகுப்பால் குடித்துவிட்டு, வெற்றிலையும் போடுவார்கள். 

அந்த வகையில், தற்போது உள்ள கலாச்சாரத்திற்கு ஏற்றார் போல பீடா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல செல்வந்தர்களின் திருமண விழாக்களில் பீடா விற்பனை செய்யப்படும். இந்த நிலையில், தற்போது ஹனிமூன் பீடா என்ற பெயரில் புதிய பீடா இந்த லிஸ்டில் இணைந்துள்ளது. 

மதுரையில் உள்ள மேற்கு கோபுர தெருவில் அமைந்துள்ள கடையொன்றில் 90 கிட்ஸ் மற்றும் 90 வயது முதியவர்களையும் ஈர்க்கும் வகையில் பீடா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த பீடாவில் குங்குமப்பூ, பாதாம், முந்திரி, கிஸ்மிஸ் பழங்கள், செரிமானத்திற்கு உதவும் தனியா, சோம்பு, வாசனைக்காக நவரத்தின சட்னி, சில்வர் முலாம் பூசிய ஏலக்காய் ஆகியவை கலந்து கொடுக்கப்படுகிறது. 

இதனால் இந்த பீடாவின் விலை ரூ.100 என்றும் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்த விளம்பரத்தில் தேனிலவு தம்பதிகளுக்கு என்ற பிரத்தியேக வாசகமும் இடம்பெற்றுள்ளது. இந்த பீடா இணையதளம் மூலமாகவும் டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக்கண்ட 90 கிட்ஸ் நிலைமைதான் பெரும் கவலைக்கிடம். 

2 கே கிட்ஸ் காதலி அல்லது மனைவியுடன் பீடாவை ருசித்து சாப்பிட்டு வருகின்றனர். குழந்தைகளுடன் இருக்கும் 80 கிட்ஸ் கூட பீடாவை வாங்கி சென்று மனைவியுடன் சாப்பிட்டு கொண்டாடுகின்றனர். 90 கிட்ஸ் மட்டுமே தனி நபராகவோ அல்லது தங்களின் ஆண் நண்பர்களுடன் சென்று வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sweet Beeda Paan Sales In Madurai Name of Honeymoon Paan Beeda


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->