வசமாக சிக்கிய எஸ்.வி.சேகர்! அதிரடி தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம்!
SV Sekar Supreme Court case
கடந்த சில வருடங்களுக்குமுன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து, சமூகவலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுதாக்கல் செய்தார்.

அவரின் இந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கில் ஆன்லைன் மூலமாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற எஸ்.வி.சேகர் தரப்பு கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.
குடும்ப பிரச்னைகள் தொடர்பான விவகாரமாக இருந்தால், காணொளி மூலமாக ஆஜராக அனுமதிக்கலாம். இந்த வழக்கில் எப்படி அனுமதிப்பது? என்றும், சேகரை நோக்கி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
English Summary
SV Sekar Supreme Court case