சூப்பர் எல் நினோ அச்சுறுத்தல்: பிப்ரவரி 2027-க்குள் 4.5 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு - உலக நாடுகளுக்குக் க்ளைமேட் இம்பாக்ட் லேப் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தீவிர வெப்ப மாறுபாடு புவி வெப்பமயமாதலுடன் இணைந்து 'சூப்பர் எல் நினோவாக' (Super El Niño) உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக, செப்டம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரையிலான ஆறு மாத காலத்தில் உலகளவில் 4,50,000-க்கும் அதிகமானோர் கடுமையான வெப்பத்தின் தாக்கம் தாங்காமல் உயிரிழக்கக்கூடும் என ‘க்ளைமேட் இம்பாக்ட் லேப்’ (Climate Impact Lab) நடத்திய புதிய ஆய்வில் திடுக்கிடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு அரைக்கோள நாடுகளுக்குப் பெரும்பாதிப்பு:

இந்த ஆய்வு முடிவுகளின்படி, உயிரிழப்புகளில் பெரும்பாலானவை ஆப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளை உள்ளடக்கிய 'க்ளோபல் சவுத்' (Global South) பகுதிகளிலேயே பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவின் சாஹெல் பிராந்தியத்தில் மட்டும் சுமார் 66,800 கூடுதல் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும். நாடுகளின் அடிப்படையில் நைஜீரியா (31,320), இந்தோனேசியா (19,251) மற்றும் சூடான் (17,430) ஆகிய நாடுகள் அதிகளவு பாதிப்பைச் சந்திக்கும் பட்டியலில் முன்னணி வகிக்கின்றன.

இந்தியாவில் தீவிரமடையும் வெப்பநிலை:

எல் நினோவின் தீவிரப் போக்கால் இந்தியாவில் வழக்கத்திற்கு மாறாக வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 2027 வரையிலான காலத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 15,800 கூடுதல் வெப்ப உயிரிழப்புகள் பதிவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நிலவும் குளிர்காலத்திலும் இம்முறை அசாதாரண அதிக வெப்பநிலை தொடரும் என்பது கவலையளிக்கும் அம்சமாகும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான கோரிக்கை:

சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய இந்த ஆய்வுக்குழு, தற்போது நிகழும் வெப்பநிலை உயர்வு எதிர்கால புவி வெப்பமயமாதலின் ஆபத்தான முன்மாதிரி எனச் சுட்டிக்காட்டியுள்ளது. வெப்ப அலைகள் மட்டுமின்றி வறட்சி, காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு மற்றும் விவசாய இழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், உலக நாடுகள் உடனடியாகக் கூலிங் மையங்களை அமைத்தல், முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் வெளிப்புறத் தொழிலாளர்களின் வேலை நேரத்தை முறைப்படுத்துதல் போன்ற அவசரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Super El Niño Alert Over 4.5 Lakh Heat-Related Deaths Projected Globally by Feb 2027 India Facing 15800 Extra Casualties


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->