'ஜெம்' வீரமணி போக்ஸோ வழக்கு: உதவியாளர்கள் சாந்தி, மகேந்திர சிம்ஹனை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்துக்காக 'ஜெம் கிரானைட்' தொழிலதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், வீரமணி உதவியாளர் கணேசன் ஆகியோர் மீது மத்திய குற்றப் பிரிவு காவல் துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது.

இந்த வழக்கில் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் இருவருரையும் முன்று நாள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை தரப்பில் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனுவில், ஏற்கெனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் எடுத்து விசாரித்த வீரமணி அளித்த தகவலின் பெயரில் இவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இன்னும் எத்தனை சிறுமிகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு நாட்களாக குற்றம் நடந்தது என்றும், வேறு யார் யாருக்கு எல்லாம் தொடர்பு என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் காரணமாக இருவரையும் மூன்று நாட்கள் தங்களின் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என காவல் துறை தரப்பில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கபட்டது.

குறித்த மனு இன்று மாலை நீதிபதி பத்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோருக்கு 03 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், இருவரையும் வரும் ஞாயிற்றுகிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சிறுமிகளுக்கு பணம், செல்போன், பரிசுப் பொருட்கள் என விலை உயர்ந்த பொருட்களைக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, 'ஜெம் கிரானைட்​ஸ்' நிறு​வனர் ஆர்​.வீரமணி (84) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ மூலம் இந்த தகவல் வெளியானது.

ஜெம்​.வீரமணி ஏழ்மை மற்றும் ஆதரவற்ற சிறுமிகளைக் குறி வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இவரால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் நாள்தோறும் ஒவ்வொரு தகவல்களாக வெளிவந்துகொண்டுள்ள நிலையில், வழக்கில் இன்னும் மர்மங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

சென்னை தேனாம்பேட்டையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களை வரவழைத்து அவர்களுடன் ஜெம் வீரமணி பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கில் வீரமணியின் தேனாம்பேட்டை வீட்டை கவனித்து வந்த அவரது உதவியாளர்கள் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே அவர்களை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Court orders 3 day police custody for Gem Veeramani POCSO case aides Shanthi and Mahendra Simhan


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->