காதலில் வழுக்கி விழுந்த சுந்தரா டிராவல்ஸ் கதாநாயகி, கணவர் மீது பரபரப்பு குற்றசாட்டு.! - Seithipunal
Seithipunal


சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் மூலமாக தமிழக மக்களிடையே வரவேற்பை பெற்ற நடிகை ராதா, ஒருவரை திருமணம் செய்து அவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதன்போது, தனக்கு ஆதரவாக இருந்த உதவி ஆய்வாளர் வசந்த ராஜாவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். 

இவர்கள் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், ராதாவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட தொடங்கியது. காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த வசந்தராஜா, தன்னிடம் சண்டை போட்டு அடித்து உதைத்து வருகிறார் என்று காவல்நிலையத்தில் ராதா புகார் அளித்துள்ளார். 

இதுதொடர்பான புகாரில், " வசந்த ராஜா வை நல்லவர் என்று நம்பி காதலித்தேன். அவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள நிலையில், காதல் மேல் உள்ள நம்பிக்கையால் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். 

திருமணத்திற்குப் பின்னர் எனக்கு சொந்தமான மூன்று மாடி குடியிருப்பில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், துவக்கத்தில் தன்னிடம் மிகுந்த அன்புடனும், அக்கறையுடனும் வசந்தராஜா நடந்துகொண்டார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரின் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றத்தை கவனிக்கையில், அவர் ஒரு பிளேபாய் என்பது தெரியவந்தது. 

தனது கணவர் வசந்தராஜாவுக்கு உதவிகள் செய்து வந்த பணக்கார இளைஞரான சதீஷ் என்பவர் மூலமாக இந்த உண்மை எனக்கு தெரியவந்தது. இதனை அறிந்து கொண்ட வசந்த ராஜா, தன் மீது குறை கண்டுபிடிக்கும் நோக்கில் எனது செல்போனை வாங்கி பார்த்து சந்தேகம் கொண்டு என்னை தாக்குகிறார் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sundara Travel Movie Actress Radha Complaint Against his Police Husband about Doubt Torture


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal