தோழியின் கஷ்டத்துக்கு உதவிய மாணவி.... வீட்டில் நகை எடுத்தது தெரிந்ததும் ஏற்பட்ட விபரீதம்...! - Seithipunal
Seithipunal


நாகை அந்தணப்பேட்டை புடவைக்கடை தெருவை சேர்ந்த அசோக் – வாசுகி தம்பதியின் 16 வயது மகள் மஹதி. நாகையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், தோழிக்கு உதவ நினைத்து எடுத்த முடிவு இறுதியில் சோகத்தில் முடிந்துள்ளது.

மஹதியின் தோழி ஒருவர், தனது உறவினர் கடன் சுமையில் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களுக்கு பணம் அல்லது நகை கொடுத்து உதவுமாறும் மஹதியிடம் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தோழியின் நிலையை அறிந்த மஹதி, பெற்றோரிடம் தெரிவிக்காமல் வீட்டில் இருந்த 3 பவுன் நகையை எடுத்துச் சென்று தனது தோழியிடம் கொடுத்துள்ளார்.சில நாட்களுக்குப் பிறகு வீட்டில் இருந்த நகை காணாமல் போனது குறித்து பெற்றோருக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், நகையை மீட்டுத் தரக்கோரி நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவலர்கள், மஹதியின் தோழியிடம் இருந்த நகையை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

நகை விவகாரம் தொடர்பாக மஹதிக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தால் மனமுடைந்த மஹதி, வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை நகர காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டனர்.பின்னர் உடல் உடற்கூராய்வுக்காக நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக மஹதியின் தாயார் வாசுகி அளித்த புகாரின் அடிப்படையில் நகர காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தோழிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோருக்குத் தெரியாமல் நகையை எடுத்துச் சென்ற பள்ளி மாணவி, அதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் நாகையில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

student who helped her friend her distress tragedy occurred when it discovered that jewelry taken from house


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->