மாணவன் தமிழ்ச்செல்வன் கொலை வழக்கை மரண வழக்காக மாற்றக்கோரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம்..!
Student organizations besieged the Madurai Collectors office demanding that the case regarding the death of student Tamilselvan be reclassified as a homicide case
மதுரையில் மாணவர் தமிழ்ச்செல்வன் மர்மமான முறையில் சட்டமாக மீட்பட்ட நிலையில் குறித்த வழக்கை, மரண வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தை எஸ்.எப்.ஐ மாணவர் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் அவர்களை குண்டுகட்டாக கைது செய்து வேனில் ஏற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த செப்.6, ஞாயிறு விடுமுறையன்று, மதுரை கூடல்நகரைச் சேர்ந்த யோகலெட்சுமி-கருப்பசாமி தம்பதியினரின் மகன் தமிழ்ச்செல்வன் (16), 11-ஆம் வகுப்பு மாணவர். காலையில் கிரிக்கெட் விளையாட சென்ற தமிழ்ச்செல்வனை, மறுநாள் மதுரை ஆனையூர் கழிவுநீரேற்று நிலையம் அருகே, முட்புதர் பகுதியில் காயங்களுடன் சடலமாக போலீசார் மீட்கப்பட்டார்.
அதன்பின்னர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கும் நிலையில், மாணவரின் உடலை அவரது பெற்றோர் வாங்க மறுத்துள்ளதால், மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர் ஒரு மாணவியுடன் நட்பு முறையில் பேசியதால், மாணவியின் அப்பா சில நாட்களுக்கு முன்பு மாணவனை கூப்பிட்டு கண்டித்ததாகவும், மாணவியின் தந்தை தரப்பினர் ஆணவக் கொலை செய்திருக்கலாம் என தமிழ்ச்செல்வன் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கையில், மாணவர் மார்பில் காயத்துடன், கால்களில் சிராய்ப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தமிழ்ச்செல்வனின் தாய் யோகலட்சுமியிடம், தமிழ்ச்செல்வனை சிலர் அடித்துக் கொன்றதாக, அவரது நண்பர் ஒருவர் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், மாணவர் தமிழ்ச்செல்வனின் தாய் யோகலெட்சுமி, எனது மகனின் மரண வழக்கை வேறு விசாரணை அமைப்பு மாற்ற வேண்டும் என்றும், போலீசார் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
குறித்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி விஜயகுமார், சம்பந்தப்பட்ட சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க வேண்டும் என்றும், இறந்த மாணவரின் நண்பன், மாணவரின் தாயாருடன் பேசிய ஆடியோவை போலீசார் ஆய்வு செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இந்நிலையில் தமிழ்ச்செல்வனின் மரண வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். விசாரணையை துரிதப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, இன்று காலை எஸ்.எப்.ஐ., டி.ஒய்.எப்.ஐ., ஏ.ஐ.டி.டபிள்யூ.ஏ., டி.என்.யூ.எப் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை பகுதியில் காலை 10 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் நேரடியாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Student organizations besieged the Madurai Collectors office demanding that the case regarding the death of student Tamilselvan be reclassified as a homicide case