மாணவர் சேர்க்கை குறைவு: தனியார் கல்லூரிகள் சேர்க்கையை நிறுத்தின அதிர்ச்சி தகவல்!
Student enrollment decrease Shocking news that private colleges have stopped enrollment
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 80 கல்லூரிகள் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்காமல், மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன என அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் தற்போது 55 அரசு, 31 அரசு உதவி பெறும், மற்றும் 401 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், அரசு சார்ந்த கல்லூரிகளில் 32,000-க்கும் அதிகமான இடங்கள் உள்ளதுடன், தனியார் கல்லூரிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன.
2024-25 கல்வியாண்டில் மட்டும், 91,000 இடங்கள் காலியாக இருந்தன என்பது கவலைக்கிடமான தரவாகும். இந்த நிலையை மாற்றும் வகையில், உயர்கல்வித்துறை இந்த ஆண்டு (2025-26) மாணவர் சேர்க்கையை நேரடி முறையில் தொடங்கியுள்ளது. இருப்பினும், விறுவிறுப்பான பதிலை பெற முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சேர்க்கை குறைவுக்கான காரணங்கள்:மாணவர்களிடையே என்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகள் மீது அதிக ஈர்ப்பு,பாலிடெக்னிக் படிப்பின் மீதான விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கை குறைவுவேலை வாய்ப்பு பற்றிய சந்தேகங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவுகளின் பார்வையில்:அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 80% இடங்கள் நிரம்பியுள்ளன,அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் 70% இடங்கள் நிரம்பியுள்ளன,401 தனியார் கல்லூரிகளில் 321-ஐ மட்டும் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளன,ஆனால், அதிலும் மொத்தம் 36,000 இடங்களே நிரம்பியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக கவலையளிக்கும் விஷயமாக 80 தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளன என அதிர்ச்சி ஊட்டும் தகவல் வெளியாகியுள்ளது,
தற்போதைய சூழலில், மாணவர் சேர்க்கை குறைவது, தொழில்நுட்பக் கல்வியின் எதிர்காலத்துக்கு சவாலாக இருக்கலாம். இந்த துறையின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க, தரமான பாடத்திட்டங்கள், தொழில்துறை இணைப்பு, வேலைவாய்ப்பு உத்தரவாதம் போன்ற அம்சங்களில் அரசு மற்றும் கல்லூரிகள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
English Summary
Student enrollment decrease Shocking news that private colleges have stopped enrollment