தொடங்கிவைத்த டாக்டர் இராமதாஸ்! #StopHindiImposition தெறிக்கும் டிவிட்டர் தளம்!
StopHindiImposition trending 2023
இந்தியாவில் உணவுப் பொருட்களின் தரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (Food Safety and Standards Authority of India- FSSAI) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
உன்னதமான நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இப்போது இந்தியை திணிக்கும் நோக்கத்திற்காக மத்திய அரசால் பயன்படுத்தப்படுகிறது. உணவுப் பொருட்களை உறையில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், அதற்காக உணவுப் பாதுகாப்பு தர ஆணையத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.
இந்நிலையில், ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் உறைகளின் மீது தயிர் என்று எழுதக்கூடாது என்றும், தாஹி என்ற இந்திச் சொல்லைத் தான் எழுத வேண்டும் என்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் கட்டுப்பாடு விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்க்கு முதல் ஆளாக பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்து, மத்திய அரசின் இந்த மறைமுக ஹிந்தி திணிப்புக்கு அடிபணிந்து விடக்கூடாது என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், "எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்!
மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition
குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்" என்று கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், "StopHindiImposition" என்ற ஹேஷ்டேக் மூலம் சமூகவலைதங்களில் மத்திய அரசுக்கு கடும் கண்டனங்களை தமிழக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், டிவிட்டர் சமூகவலைத்தளத்தில் "StopHindiImposition" என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து உள்ளது.
English Summary
StopHindiImposition trending 2023